Home /News /tamil-nadu /

பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் - அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் - அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும், சர்பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமையும் இயங்கும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டார்.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டார். அதன்படி பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களில் சிலர் குறுகிய கால அவகாசத்தில் ஆவண பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு (தட்கல்) ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    மேலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாள் அன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளிலும் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும் இதற்கு கட்டணமாக ஆயிரம் வசூலிக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகள் 

    1.பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிக வரித்துறையில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

    2. வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

    3. வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் தனியார் தொழில் நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும்.

    4. வணிக வரி தொழில்வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும்.

    5. வணிக வரித்துறையின் அழைப்பு மையம் (Call centre) மேம்படுத்தப்படும்.

    6.வணிகவரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பிரிவு உருவாக்கப்படும்..

    7. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும்.

    8. வணிகவரித் துறையில் பயிற்சி நிலைய இயக்குனர் பணியிடம் உயர்த்தப்பட்டு அவரது நினைவிடத்தில் தலைமையின் கீழ் எளிய வணிக பிரிவு (Indirect Taxes Wing) உருவாக்கப்படும்.

    9. வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST PRIME என்ற மென்பொருள் ரூபாய் 47.20 இலட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும்.

    10. வணிக வரித்துறையில் சுற்றும் படையில் (Roving Squad) பணிபுரியும் அலுவலர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

    11.தீர்ப்பாயம் அல்லது உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் இந்திய சட்டங்கள் தொடர்பான ஆணைகளில் வரி இழப்பு இனங்களை கையாள புதிய வழிமுறைகளை உருவாக்கப்படும்.

    12.வணிகவரித் துறையில் 2 அலுவலக கட்டடங்கள் ரூபாய் 7.80 கோடி செலவில் அமைக்கப்படும்

    13.பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையம் ரூபாய் 100 கோடியில் செலவில் உருவாக்கப்படும்.

    14.சார் பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் முழுமையாக வாழ 50 லட்சம் செலவில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்

    15.பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் unified call center சென்டர் ரூபாய் 50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

    16.திருமண சான்றிதழ் திருத்தம் செய்வதற்காக இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி ரூபாய் 6 லட்சம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும்

    17.சென்னை மற்றும் அவசர வேலை நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஒரு ஆவணத்தை பதிவிற்கான முன்பதிவு தொகை வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும்

    18.அலுவலகங்களில் பணியாற்றுவோர் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாள் என்று ஏற்று பதிப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளிலும் செயல்படும்

    19.பதிவு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூபாய் 35 லட்சம் ரூபாய் செலவில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படும்

    20.அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே Star மென்பொருள் வழியாக தன்னிச்சையாக தடுக்கும் திட்டம் ரூபாய் 12லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

    21. பதிவுத் துறையில் உள்ள மிக பழமையான 50 கட்டிடங்களை அப்புறப்படுத்தி ரூ.96.64 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

    22. தமிழகத்தில் 1998க்கு பின்னர் புதிதாக ஆவண எழுத்தர் உரிமைகள் வழங்கப்படவில்லை.

    ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் 20ஆயிரம் நபர்கள் பயன்பெறுவர்.

    23. பதிவுத்துறையில் பெற்று தட களப் பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு களப் பணி மேற்பார்வையாளர் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    24. சங்கங்களின் ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களின் தாமத கோர்வையாக விதிக்கப்படும் அபராதத் தொகையை வசூலிக்க சமாதானத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    25. பதிவுத் துறையில் தற்போது மிக குறைந்த முகம் மதிப்புடைய ரூபாய் 10 ரூபாய் 20 ரூபாய் 50 ஆகிய முத்திரைத் தாள்களின் பயன்பாட்டினை மாற்றி குறைந்தபட்சமாக ரூபாய் 100 என நிர்ணயித்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இந்திய முத்திரைச் சட்டம் 1899 ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்

    26. நிர்வாகத்தை எளிமையாக்கி மேம்படுத்தும் நோக்கில் சென்னை பதிவு மண்டலமானது சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கு என இரு பிரிவு மண்டலங்கள் பிரிக்கப்படும் இதற்காக தொடர் செலவினமாக ரூ 75.24 லட்சம் மற்றும் தொடரா செலவினமாக 26.10 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    27. நிர்வாக நலன் கருதி மதுரை மண்டலத்தை பிரித்து இரண்டு பதிவு மையங்கள் உருவாக்கப்படும் இதற்காக தொடர் செலவினம் ரூபாய் 75.24 லட்சம் மற்றும் தொடரா செலவினம் 26.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    28. தென் செண்ணை பதிவு மாவட்டத்தை பிரித்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பதிவு மாவட்டம் உருவாக்கப்படும் இதற்கான தொடர் செலவினம் 92.75 லட்சம் மற்றும் தொடர் செலவினம் 34.40 லட்சம் ஆகும்

    29. கோயம்புத்தூர் பதிவு மாவட்டத்தை பிரித்து ஒருவர் இரு பதிவு மாவட்டங்கள் ( கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் தெற்கு ) உருவாக்கப்படும் இதற்காக தொடர் செலவினமாக ரூபாய் 90.23 லட்சம் மற்றும் தொடர் செலவினமாக ரூபாய் 34.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    30. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் தெற்கு பதிவு மாவட்டங்களிலும் தற்போது மாவட்ட பதிவாளர் தணிக்கை பணியிடங்கள் இல்லாத சேலம் கிழக்கு கோபிசெட்டிபாளையம் மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களிலும் புதிதாக மாவட்ட பதிவாளர் தணிக்கை பணியிடங்கள் உருவாக்கப்படும் இது தொடர்பாக பல விதமாக 196.00 மற்றும் பலவீனமாக 91.00 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்

    31. சீட்டு மற்றும் சங்கங்கள் செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதற்காக 26 மாவட்ட தலைநகரில் உள்ள நிர்வாகம் மாவட்ட பதிவாளர் பணியிடங்களை உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும் இதற்கான தொடர் செலவினம் ரூ 15 லட்சம்.

    32.சிறப்பாக செயல்படும் பதிவுத்துறை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் கவனத்தையும் விரைவாக திரும்ப வழங்குதல் தனித்தனி குறை நிவர்த்தி செய்தல் போன்ற பணிகள் சிறப்பாக பணியாற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில் கீழ் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் இதற்காக தொடர் செலவினம் ரூ 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, TN Assembly

    அடுத்த செய்தி