ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியுமா? - என்ன சொல்கிறது யூஜிசி விதிமுறைகள்!

மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியுமா? - என்ன சொல்கிறது யூஜிசி விதிமுறைகள்!

யூஜிசி முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ்

யூஜிசி முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ்

துணைவேந்தர் நியமனங்களில் UGC விதிகள் குறித்தும்,  மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

’தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யவதற்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வாக அமையும்’ என பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் துணைவேந்தர் நியமனங்கள் யூஜிசி விதிப்படி நடைபெறவில்லை என மாநில ஆளுநர் குற்றச்சாட்டால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கு மோதல் வலுத்து உள்ளது . அதேபோல தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது துணைவேந்தர் நியமனங்களில் UGC விதிகள் குறித்தும்,  மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமான பதிலளித்தார்.

 “ துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன ? ”

“ துணைவேந்தர்கள் நியமனத்தில் UGC தகுதிகளை மட்டுமே வகுக்கும் நியமனங்கள் முழுவதும் ஆளுநரின் அதிகாரத்திற்குட்பட்டது.”

 “துணைவேந்தர் நியமியக்கும் நடைமுறைகள் மற்றும் UGC  விதிகள் சொல்வதென்ன? ”

 

 “அரசு பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, UGC சார்பாக பிரதிநிதி மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் என 5 பேர் கொண்ட குழுவால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் உரிய நேர்காணல் நடத்தி இறுதியாக ஆளுநருக்கு மூன்று நபர்கள் கொண்ட பெயர் பட்டியலை அனுப்பி வைப்பார்கள். மூன்று நபர்களை நேர்காணல் செய்து தகுதி வாய்ந்த நபரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக ஆளுநர்   நியமிக்கின்றனர். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி  சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் பல்கலைக்கழகங்கள் ஆய்வு நிறுவனங்களில் பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றிருக்க வேண்டும். திருப்திகரமான  எண்ணிக்கையில்  ஆய்வறிக்கைகள், கட்டுரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டும். தேர்ந்த கல்வியாளராக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனை  கருத்தில் கொண்டே துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.”

 “சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டால் அரசு துணைவேந்தர்களை  நியமிக்க முடியுமா?”

“மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் அரசு கொண்டுவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் கொண்டுவரப்பட்டது. எனினும் ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து ஆளுநர்  பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமனம் செய்கிறார். கல்வி மாநில பட்டியலில் முழுவதும் இல்லாமல், பொதுப்பட்டியலில் இருப்பதால்  மாநில அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரம் கிடைக்காது” என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

மேலும் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் பதவிகளுக்கு தமிழகத்தில் 40 முதல் 50 கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த  பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் , ’ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில்  பதவியில் இருக்கும் பொழுது இந்த குற்றச்சாட்டை தெரிவித்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: UGC, Vice chancellor