அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்..

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்..

அஇஅதிமுக அலுவலகம்

அதிமுகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் நிறைவடைந்த நிலையில், இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 24-ஆம் தேதி முதல், விருப்பமனுக்கள் பெறப்பட்டு வந்தன. விருப்பமனுக்களை சமர்ப்பிக்க மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டு புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டவர்கள், விருப்பமனுக்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். 8 174 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ள நிலையில், 7000 பேர் விருப்பமனுக்களை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களிடம், வியாழக்கிழமையான இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

  அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. வரும் 10-ஆம் தேதி வரை விருப்பமனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை பெற்றனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன், விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

  மேலும் படிக்க... அதிமுக VS திமுக : இழுபறியில் இருப்பது எந்தக் கூட்டணி ?

  இதற்கிடையே, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக ஒரே நேரத்தில் ஐந்து பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் 7969 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ள சூழலில், ஏழாயிரம் பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: