சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றம்சாட்டினர். மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் சந்தேக மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினர் முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாக காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் தெரிவித்த தகவல், காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என் உயிருக்கு ஆபத்து... பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க உள்ளேன் - மதுரை ஆதீனம்
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு முடிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில், 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள உடற்கூறு ஆய்வு முடிவில், விசாரணைக் கைதி விக்னேஷ் உடலில் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விக்னேஷ் தலையில் 1 செ.மீ அளவுக்கு ஆழமான துளை உள்ளதாகவும், லத்தி, கம்பால் அடித்து இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.