ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

மாதிரி படம்

மாதிரி படம்

சீனாவில் இருந்து வருவோருக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச விமான பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் BF 7 வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இந்த வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச விமான பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் இருந்து வருவோருக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பரிசோதனை செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை தேவை என மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.

First published:

Tags: Central government, Covid-19, COVID-19 Test, TN Govt