திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமானநிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் கீழ் உள்ள விமான நிலையங்களுக்கு வந்து, செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தர நிலை (கிரேடு) அளிக்கப்படுகிறது.
முதல்தர நிலைக்கு நிர்வாக இயக்குநர், இரண்டாம் நிலைக்கு பொது மேலாளர், மூன்றாம் நிலைக்கு இணை பொது மேலாளர், நான்காம் நிலைக்கு முதுநிலை மேலாளர் அல்லது உதவி பொது மேலாளர் தகுதியுடையவர்கள் விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்படுவர்.
மூன்றாம் தர நிலையில் இருந்த திருச்சி விமானநிலையத்தில் 2019-20 ஆண்டில் 8,895 சர்வதேச விமான சேவைகளும், 5,519 உள்நாட்டு விமான சேவைகளும், 69 பிற காரணங்களுக்கான விமான சேவைகளும் என மொத்தம் 14,483 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 லட்சத்து 14 ஆயிரத்து 839 சர்வதேச பயணிகள், 2 லட்சத்து 97 ஆயிரத்து 020 உள்நாட்டு பயணிகள் என 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஓரே ஆண்டில் இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமானநிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமானநிலைய நிர்வாக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சுமார் ரூ.950 கோடி செலவில் புதிய முனையம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த தரம் உயர்வு திருச்சி விமானநிலைய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், தற்போதைய அறிவிப்பில் இந்தியாவிலேயே திருச்சி மட்டுமே மூன்றாம் நிலையிலிருந்து 2-ம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 விமான நிலையங்கள் நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி விமானநிலையமும் அடங்கும். இதனுடன் கோரக்பூர் (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), ஜபல்பூர்(மத்திய பிரதேசம்), பிரயாக்ராஜ் (உத்தரபிரதேசம்) ஆகிய விமானநிலையங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.