Home /News /tamil-nadu /

புதன்பகவான் குறித்து அறிய வேண்டிய அற்புத தகவல்கள்...

புதன்பகவான் குறித்து அறிய வேண்டிய அற்புத தகவல்கள்...

ஜோதிடத்தில் புதனை `வித்தைக்காரகன்', `வித்யாகாரகன்' என்று சொல்வார்கள். `மாதுளக்காரகன்' என்று ஜாதகரின் தாய்மாமனுக்குரிய யோகங்களைக் கூறுபவரும் புதன்தான். புதன் வித்யாகாரகன் என்பதால் தொடக்கப்பள்ளியில் கல்வி பயில்வதிலிருந்து கல்லூரிப் படிப்புவரை ஒருவரின் படிப்புக்குக் காரணமாக இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • 1 minute read
  • Last Updated :
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன்.

புதன் ஒரு விசித்திரமான கிரகம். செவ்வாயைப் போலவே புதனும் இரு ஆதிபத்திய கிரகமாகும். ஜோதிட ஆச்சர்யமாக மிதுனத்தில் ஆட்சி பெறும் புதன், ஆட்சி வீடான கன்னியில் உச்சம் பெறுகிறார். மீனத்தில் நீசமடைகிறார். அறிவு, ஞானம் இரண்டுக்கும் இவரே அதிபதியாகி படிப்பறிவு, பட்டறிவு இரண்டையும் மனிதனுக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டுக்கும் காரணமாகிறார்.

புதனை வணங்கும் முறை

புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் புதன் பகவான்  தந்தருளுவார்.

பரிகாரம்

ஆறு லக்னங்களில் பிறந்தவர்களில் புதனின் வலு குறைந்து பலவீனமாக இருப்பவர்கள், சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவெண்காடு எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் சுவேதாரண்யேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

சென்னையிலிருப்பவர்கள், போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியிலிருக்கும் கோவூரில் குடிகொண்டிருக்கும் சுந்தரேசுவரரை வணங்கினால், கூடுதலான பலன்களைப் பெறலாம்.

மேலும் படிக்க... ஆஞ்சநேயர் ஜெயந்தி : ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
First published:

அடுத்த செய்தி