வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லக்கூடியவர்கள் எங்கே செல்கிறார்கள், யார் மூலம் செல்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் குறித்து அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் சில பேர் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் அரசுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரியாத நிலை உள்ளது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வெளி நாடுகளுக்கு செல்பவர்கள் எந்த நாட்டுக்கு செல்கிறார்கள், எந்த ஏஜெண்ட் மூலம் செல்கிறார்கள், ஏஜெண்டுகளின் விவரம், பணி செய்யும் இடத்தின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Also read: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா - அமைச்சர் தகவல்
தொடர்ந்து, இன்று நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று வறுமை நிலையில் தாயகம் திரும்புபவர்களின் சிரமத்தை போக்க, அவர்கள் தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்கவும், 60 வயதை கடந்து இருப்பின் மாதம் ரூ.5000 நிவாரண தொகை வழங்க ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அந்த இடங்கள் மூலமாக வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும், மூன்று மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.