ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒவ்வொரு வாக்காளனும் வாக்களிக்க வேண்டும்... மெஹந்தியில் விழிப்புணர்வு

ஒவ்வொரு வாக்காளனும் வாக்களிக்க வேண்டும்... மெஹந்தியில் விழிப்புணர்வு

மெஹந்தி போட்டி

மெஹந்தி போட்டி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஒவ்வொரு வாக்காளனும் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிக்களுக்கிடையே மெகந்தி போட்டி சென்னையில் இன்று  நடைபெற்றது.

வரும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்சிகள் தேர்தல் ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக  சென்னை இராணி மேரி கல்லூரியில் மெஹந்தி போட்டிக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒரே அரங்கத்தில்   விழிப்புணர்வு வாசகங்கள், வடிவங்கள் அடங்கிய மெஹந்தியை வரைந்து கொண்டனர். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல வடிவங்களில் கைகளில் மெஹந்திகள் இருக்க வேண்டும் என்பதற்காக மாணவிகள் ஒவ்வொருவரும் சிரத்தை  எடுத்துக்கொண்டனர்.

மாணவிகள் தங்களின் கற்பனையை கூர் தீட்ட    வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் அழகிய  ஓவியங்களாக மெஹந்திகள் இடம்பெற்றது. மாணவிகள் கையில் வரைந்ததில் இது தான் சிறந்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து மெஹந்திகளும் அழகாக இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் சிறந்த வாசகம் மற்றும் கட்டுரைப் போட்டிகளும்  நடைபெற்றது. சிறப்பான மெஹந்திக்கு வரும் 25-ம் தேதி vசென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையம் சார்பில்  பரிசு வழங்கப்படவுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Voter List