என்னை யாரும் கடத்தவில்லை; விருப்பப்பட்டே திருமணம் செய்தேன்...! நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம்

என்னை யாரும் கடத்தவில்லை; விருப்பப்பட்டே திருமணம் செய்தேன்...! நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம்
இளமதி செல்வம் ஜோடி
  • News18
  • Last Updated: March 16, 2020, 8:45 AM IST
  • Share this:
தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டே செல்வனை திருமணம் செய்ததாக நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த குரும்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி, கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் ஆகியோர் 3 ஆண்டுகளாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

வேறு சாதி என்பதால், திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் கொளத்தூரில், தி.வி.க. ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, இளமதியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் செல்வன் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் இளமதி ஆஜரானார். பெற்றோருடன் செல்ல இளமதி விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பெண்ணின் வழக்கறிஞர் அளித்த புகாரில் இளம்பெண்ணை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, நிர்வாகிகள் ஈஸ்வரன், சரவணன் மற்றும் செல்வன் மீது பவானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி, அன்று இரவு 9:00 மணியளவில், தாயார் சாந்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அன்று இரவு பவானி காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.நேற்று காலை அங்கிருந்து, பவானி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, ஜே. எம்.எண் 1-வது நீதிமன்ற நடுவர் ஜீவ பாண்டியன் வீட்டில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை, செல்வனை காதலித்து வந்த நிலையில், தாமாக விருப்பப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக இளமதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை கடத்தியதாக செல்வன் புகார் கொடுத்த வழக்கு தொடர்பாக இன்று காலை மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராக உள்ளர்.

அதனைடுத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் இளமதியை அழைத்துச் சென்று ஆஜர் படுத்த உள்ளனர்.

Also See...

அமைச்சரின் தலையீடு என சந்தேகம் இருந்தது; தற்போது அது உறுதியாகியுள்ளது...! கொளத்தூர் மணி

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading