• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செங்கல்பட்டில் இளைஞர் அடித்துக் கொலை: சாதி மறுப்பு திருமணம் காரணமா?

செங்கல்பட்டில் இளைஞர் அடித்துக் கொலை: சாதி மறுப்பு திருமணம் காரணமா?

Youtube Video

சென்னை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான தேவபிரசாத். இவர் மறைமலைநகர் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்துவதற்காக தனது நண்பர்களான சதீஷ், வினோத் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விஜி என்பவருக்கும் தேவபிரசாத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேவபிரசாத்தை கல்லால் அடித்தும் கத்தியால் வெட்டியும் உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார்.

    அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் தேவபிரசாத் கிடந்துள்ளார். அந்த பகுதியில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படிக்க...தனியொருவராக உருவாக்கிய 550 ஹெக்டேர் அடர்த்தியான காடு.. அமெரிக்க பள்ளிகளில் பாடத்திட்டமானது இந்திய வன மனிதனின் வரலாறு..



    இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

     

    ஏற்கெனவே விஜி என்பருக்கும் தேவபிரசாத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: