ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

  கொரோனா சோதனை

கொரோனா சோதனை

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் ஒரேநாளில் கொரோனா பரவல் விகிதம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு நேற்று புதிதாக இரண்டாயிரத்து 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 35 பேர் மரணம் அடைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டிலேயே உச்சமாக கேரளாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினரும் போலீசாரும் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லை என்றால் தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று திரும்புவதால் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளளது.

தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரதுறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர் கேரளாவில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரானா சான்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தமிழகத்தில் அனுமதிக்க படுகின்றனர்.

கேரளா பதிவு எண் கொண்ட வானங்களில் வரும் பயணிகளுக்கு சோதனை சான்றிதழ் இல்லை என்றால் RTPCR சோதனை மேற்கொண்ட பின்பு தமிழககத்தில் அனுமதிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கு எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு சென்று தமிழகம் திரும்புவதால் குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா பரவல்

Read more : கொரோனா எங்கும் போகவில்லை... சென்னையில் அதிகரிக்கும் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை

எனவே இரு மாநில அரசும் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் 24 மணி் நேரத்தில் சராசரியாக 22 ஆயிரத்தும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் மத்திய நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்நிலையில், தமிழகத்தின் சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாமக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கோவையில் 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 164 ஆக இருந்த பாதிப்பு 181 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் 140 ஆக இருந்த பாதிப்பு 166 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 78 ஆக இருந்த பாதிப்பு, 102 ஆக அதிகரித்து இருக்கிறது. செங்கல்பட்டில் 113 பேரும், சேலத்தில் 95 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும் நோய்த்தொற்று அறியப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில், உயிரிழப்புகள் இல்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Must Read : Lockdown - அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு?

இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,145 பேர் மீண்டுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 434 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 21 ஆயிரத்து 207 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Lockdown