ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு காப்பீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு காப்பீடு- அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு காப்பீடு செய்யப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக கால்கோல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கால்கோல் நட்டு வைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற விதிமுறைகளின் படி, இந்த கொரோனா கால கட்டத்தில் தமிழக அரசு மற்றும் பொது சுகாதார துறை சொல்லி இருக்க கூடிய விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்று கூறினார்.

  மேலும், வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு செய்யப்பட இருப்பதாக விஜயபாஸ்கர் அப்போது தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும் என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்ததுடன், அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Jallikattu, Minister Vijayabaskar, Pongal 2021