தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கொங்கு மண்டலத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு மாதத்திற்குள் ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகவும், ஊடகங்களுக்கு விடப்பட்ட மிரட்டலாகவும் பார்க்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், ஊடகங்கள் ஆட்சியாளர்கள் செய்யும் தவறை மட்டுமல்ல மக்களின் பிரச்சினைகளை அன்றாடம் பிரதிபலிக்க கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் அவலங்களை வெளியுலகிற்கு கொண்டு வருவதும் ஊடகங்கள்தான். தமிழகத்தின் உரிமைகளுக்கான குரலை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பதும் ஊடகங்கள்தான். ஆட்சியில் இருப்பவர்களின் தவறை சுட்டிக்காட்டினால் அதிகாரத்தை கொண்டு ஊடகங்களை அடக்க நினைத்தால் அது அவர்களுக்கே எதிராக மாறிப்போகும்; என்று எச்சரித்துள்ளார்.
இதை படிக்க: சர்வதேச நகரமான ஆரோவிலுக்கு விரைவில் தலைவர் நியமனம்: மத்திய அரசு தகவல்!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால் ஊடகங்களை எதுவும் செய்ய முடியும் என்று நினைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம் என்றும் ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ள ஈஸ்வரன் ஊடகங்கள் மீது கோபப்படுவதை நிறுத்திவிட்டு தனது அணுகுமுறையை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு!
தமிழக முதலமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதை நிறைவேற்றுவதற்கு தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் டெல்லிக்கு சென்று முழு முயற்சி எடுத்து பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.