பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

கோப்புப் படம்

கடைகளில் விற்பனை செய்யப்படும் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் தரத்தினை, இந்திய தர சான்று மையம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 • Share this:
  பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடைகளில் விற்பனை செய்யப்படும் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் தரத்தினை, இந்திய தர சான்று மையம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

  Also read: வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க கால அவகாசம் அளிக்க சீமான் கோரிக்கை

  சானிட்டரி நாப்கின் மற்றும் டயபர்ஸ் (diapers)பாக்கெட்டில், அதில் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விற்பனை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

  இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: