பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி.. தக்காளிகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி.. தக்காளிகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் மழை காரணமாக தக்காளி தோட்டங்களில் பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை ஏரியில் கொட்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் மழை காரணமாக தக்காளி தோட்டங்களில் பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை ஏரியில் கொட்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    கிருஷ்ணகிரி ஓசூர் அடுத்த சூளகிரி அருகே ஒமுதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஓசூர் பகுதியில் தகுந்த சீதோஷ்ண நிலை காரணமாக மலர் உற்பத்தி மட்டுமன்றி காய்கறிகளையும் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதேபோல் விவசாயிகள் பெருமளவில் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டி வந்த நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக செடிகளில் உள்ள தக்காளிகளுக்கு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு தக்காளிகள் அழுகி வருகின்றன.

    அறுவடை செய்யப்பட்டுள்ள மீதமுள்ள தக்காளிகளை சந்தைகளுக்கு கொண்டு சென்றால் 25 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 100, 120க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் 25 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 700 முதல் 1,000 வரை சென்றதாகவும் தற்போது தொடர்மழை காரணமாகவும் வெளிமாவட்ட தக்காளிகள் தொடர் வரவாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

    தக்காளி விவசாயிகள்.




    ஏரியில் கொட்டப்பட்டுள்ள தக்காளிகள்.


    மேலும், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்யப்பட்டு தற்போது ஒரு லட்சம் வரை மட்டுமே கிடைப்பதாக தெரிவித்த விவசாயிகள், பூச்சி தாக்குதல் உள்ள தக்காளிகளை மட்டும் ஏரியில் கொட்டுகிறோம், மற்ற வகைகளை விற்பனை செய்து வருகிறோம். 100க்கு 80 சதவிகித தக்காளிகள் பூச்சி தாக்குதல் உள்ளதால் ஏரியில் கொட்டுவதாக தெரிவித்தனர்.

    நகைகளை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் பெற்று சொட்டுநீர் பாசனம் மூலம் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கும் விவசாயிகள், தங்களுக்கு அரசு உதவி புரியவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Published by:Rizwan
    First published: