கடலூரில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக புகார்

கோப்புப் படம்

கடலூரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு தங்களது நிலப்பட்டா சான்றுகளை காட்டி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

    அப்படி கடலூர் பிள்ளையார்மேடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    Also read... இலங்கை நாடாளுமன்றம்: பிரதமர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அமைச்சரவையில் இடம்பிடித்த 4 பேர்..

    அதேசமயம் விவசாயிகள் அல்லாத 600 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியை தொடர்புகொண்டு பேசிய போது, தமிழகம் முழுவதும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



    இதனிடையே தமிழகம் முழுவதும் விவசாய உதவித்தொகை வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published: