ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சி.பி.சி.ஐ.டி மீது குற்றம்சாட்டிய இடைத்தரகர்கள் ஜெயக்குமார், ஓம் காந்தன்! கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்

சி.பி.சி.ஐ.டி மீது குற்றம்சாட்டிய இடைத்தரகர்கள் ஜெயக்குமார், ஓம் காந்தன்! கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்

சி.பி.சி.ஐ.டி (கோப்புப் படம்)

சி.பி.சி.ஐ.டி (கோப்புப் படம்)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 , குரூப் 2 ஏ மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இதுவரை 50 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த மூன்று தேர்வு முறைகேடுகளிலும் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் முக்கியமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள். இதனால் குரூப் 4 முறைகேடு தொடர்பாக ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை போலீஸ் காவலில் எடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்டு இடைத்தரகர் ஜெயக்குமார், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் தன்னுடைய கூட்டாளிகள் குறித்துக் கொடுத்த தகவலின் அடிப்படையில் நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றிய பின்னணியும், இந்த முறைகேடு மூலமாக வசூல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குரூப்-2 விவகாரத்திலும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதனடிப்படையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணைக்கு வரும்போது இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தொடர்ந்து போலீஸ் காவலில் செல்வதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். குரூப்-4 முறைகேட்டில் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கண்களை கட்டி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகளை காட்டி என்கவுண்டர் செய்து விடுவோம் என மிரட்டி விசாரணை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கேட்ட நீதிபதி சிபிசிஐடி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முறைகேடு தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளனர். குரூப் 2a விவகாரத்தில் 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்புடைய மற்ற நபர்களையும், கண்டுபிடிப்பதற்காகவும், சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று குரூப் 2-ஏ முறைகேட்டை எவ்வாறு அரங்கேற்றினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: TNPSC