ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

4 பாஜக எம்எல்ஏக்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு - எல்.முருகன்

4 பாஜக எம்எல்ஏக்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு - எல்.முருகன்

 பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று கூறியவர்களுக்கு தற்போது, 4 தொகுதிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

  நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதன்படி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  இதில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில், உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, பா.ம.க சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உறுதிமொழி வாசித்து எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றனர்.

  பின்பு முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகராக பொறுப்பேற்கவுள்ள அப்பாவு ஆகியோர் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றனர். மேலும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடவுள் அறிய என்று கூறி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த பாஜக உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எம்.ஏர்.காந்தி உட்பட அனைவரும் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.

  இதனிடையே, தமிழகத்தில் 4 பாஜக எம்.எல்.ஏ.க்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறும்போது, தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று கூறியவர்களுக்கு தற்போது, 4 தொகுதிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளோம். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4 பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த அந்ததந்த மாவட்ட கட்சித் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்.

  திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை கொண்டு வந்ததே அவர்கள் தான். ஆனால், இன்று நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என மக்களை எமாற்றுகிறார்கள் என்று அவர் கூறினார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, BJP MLA, TN Assembly