Home /News /tamil-nadu /

பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதிரடி

பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதிரடி

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணியே தொடரும் எனவும் தாங்கள் கைகாட்டுபவர்கள் தான் 2021ம் ஆண்டு ஆட்சிக்கட்டில் அமர அமரப்போகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன், வரும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் பாஜக தரப்பிலிருந்து கணிசமான எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்குச் செல்வார்கள் என்றும் கூறினார். மேலும், தாங்கள் கை காட்டுபவர்கள்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமர்வார்கள் என்ற கருத்துக்கு, அதில் எந்த மாற்றமும் இல்லை என விளக்கம் தெரிவித்தார்.

இதற்கிடையே, மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உட்பட 198 பேர் கலந்துகொண்டனர்.

Also read: மதுரையை மையமாக வைத்து இரண்டாவது தலைநகர் - அமைச்சர் உதயகுமார் தீர்மானம்

அந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, எம்.ஜி.ஆரைப்போல், மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி பிரதமர் நரேந்திர மோடியிடமே உள்ளது. தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. நாம் கை காட்டுபவர்கள்தான் 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறார்கள்.

எனவே, நமது எண்ணம், செயல்பாடு, நோக்கம் அனைத்தும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பும் வகையில் இருக்க வேண்டும். எந்த ஒரு மாவட்டத்திலிருந்து பாஜக எம்.எல்.ஏ.வை சட்டப்பேரவைக்கு அனுப்புகிறதோ அந்த மாவட்டத்  தலைவருக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published:

Tags: BJP

அடுத்த செய்தி