கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி சிறை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை

Youtube Video

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த வழக்கறிஞர் ராஜவேல் சிறை வளாகத்தில் 3 வது பிளாக்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த வழக்கறிஞர் ராஜவேல் சிறை வளாகத்தில் 3 வது பிளாக்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவையை சேர்ந்த பிரபல வழகறிஞர் தம்பதி ராஜவேல் - மோகனா. இதில் வழகறிஞர் மோகனா, 2008 ஆம் ஆண்டு முதல் ஓடிசா மாநிலத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பைனான்ஸ் மோசடி தொடர்பாக அவர் மீது ஓடிசா போலீசார் வழக்குகள் பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் 2011 ல் வழக்கு தொடர்பாக தன்னிடம் வந்த சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்த வழகறிஞர் ஈ.டி. ராஜவேல், அந்த சடலைத்தை தனது மனைவியின் சடலம் என கூறி போலி மருத்துவ சான்றிதழ் பெற்று உடலை எரித்தார். பின்னர் இறப்பு சான்றிதழ் பெற்று ஓடிசாவில் உள்ள வழகறிஞர் மோகனா மீதான வழக்குகளை முடிவிற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் வேறு ஒரு வழக்கு விசாரணை போது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்த்து. இந்த வழக்கில் வழகறிஞர் தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கணவன் மனைவி இருவருக்கும் கோவை நீதி மன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. வழகறிஞர் தம்பதி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விரக்தியில் இருந்த வழகறிஞர் ராஜவேல் நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் சிறையில் இருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் ராஜவேலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 மணி அளவில் உயிரிழந்தார்.

Must Read : பாஜக பூச்சாண்டி... நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்பேன் - சீமான் கொந்தளிப்பு

 

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Suresh V
First published: