ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் அரசுடைமையானது. இதற்கு ஜெ தீபா, “எங்கள் பாரம்பரிய இல்லத்தை எங்கள் கருத்தைக் கேட்காமல் தமிழக அரசு எடுத்துள்ளது. அங்கே ஒரு குடிசை வீடு இருந்தால்கூட அதை நான் விட்டுத்தர மாட்டேன். நான்கு வருடத்திற்கு முன்னால் இருந்த நில விலைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு அதைவிட அதிகம்.
குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து அரசாணையை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டதால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உயர் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எனவே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
தமிழக முதலமைச்சர் அரசியல் நோக்கத்திற்காகவே வேகமாக நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறார். இதை வைத்து அரசியல் பலன் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளார் " என்று கூறியுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.