• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை

கருணாநிதி

கருணாநிதி

சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

  • Share this:
    சிறுபான்மையினரின் நலன் காத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என இனிக்கோ இருதய ராஜ்  பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், “தமிழகத்தில் நேர்மையான திறமையான ஆட்சியர்களை தன் சிறப்பு செயலாளராக பொருபளித்து சீரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வை காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நடுப்பகுதி, என்பதாலும் அனைத்து வசதிகளும் இருக்கும் இடமான திருச்சி மாநகரகத்தை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக இருக்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    திருச்சி கிழக்கு மிக பெரிய தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரிக்கை விடுக்கிறேன். திருச்சி காந்தி மார்கெட் விரிவாகம் செய்ய வேண்டும். காந்தி மார்கெட் அருகில் 14.28 ஏக்கர் பெண்கள் சிறைசாலை வேறு இடத்திற்கு காந்தி மார்கெட் நவீன கிடங்குகள் அமைக்க வேண்டும்.

    Must Read : உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்

    ஆளுநர் உரை வித்தியாசமானது. வார்த்தை அலங்காரம் இல்லாத உரையாக ஆளுநர் உரை உள்ளது. அதிமுக ஆட்சியில்  கடந்த பத்து வருடமாக வடமாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்பை அளித்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் முதலமைச்சர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதமாக இருக்கக்கூடிய அரசு கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் வீறுநடை போட்ட செயல்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: