பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அமைச்சரவை பரிந்துரை செய்து ஓராண்டிற்கும் மேலாகியுள்ள நிலையில் தமிழக அரசு பலமுறை ஆளுநருக்கு நினைவூட்டல்களை செய்தது. ஆனாலும் அமைச்சரவையின் பரிந்துரை பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை கூறி வந்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  ஆனாலும் தனது முடிவு குறித்து அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் எந்த தகவலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.

  அதற்கு முன்பாக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அப்போது, அரசியலமைப்பின் 161வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் ஆளுநர் விடுவிக்க முடியும் என அவர் கூறியிருந்தார்.

  அமைச்சரவை பரிந்துரை செய்து ஓராண்டிற்கும் மேலாகியுள்ள நிலையில் தமிழக அரசு பலமுறை ஆளுநருக்கு நினைவூட்டல்களை செய்தது. ஆனாலும் அமைச்சரவையின் பரிந்துரை பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை கூறி வந்தது.

  இந்த பரிந்துரையின் மீது முடிவு எடுப்பதற்காக பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் மற்றும் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் உறவினர்கள் ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்துப் பேசியிருந்தார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: