பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு

பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் சில தொகுதிகள் சிக்கலின்றி பா.ம.க-வுக்கு கிடைத்துள்ளது.

 • Share this:
  அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரு கட்டமாக நடைபெறுகிறது. திராவிட கட்சிகள் தங்களது கூட்டணியை ஓரளவு இறுதி செய்துள்ளது. தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

  தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி உ்ளளது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

  அ.தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.  சோளிங்கர், திருப்போரூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், மேட்டூர், சேலம் மேற்கு, வந்தவாசி (தனி), செஞ்சி, விருத்தாசலம், மயிலம்,  பூந்தமல்லி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி,, கும்மிடிப்பூண்டி, ஜெயங்கொண்டம், பென்னாகரம், தருமபுரி, ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), ஆற்காடு, கீழ்பென்னத்தூர், கீழ்வேலூர், சங்கராபுரம், மயிலாடுதுறை, நெய்வேலி, ஆகிய தொகுதிகள் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் சில தொகுதிகள் சிக்கலின்றி பா.ம.க-வுக்கு கிடைத்துள்ளது.
  Published by:Ramprasath H
  First published: