கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம்.. அரசு வேடிக்கை பார்க்காது - தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

  கொரோனா ஊரடங்கில் கட்டுமானப் பணிகள் நடக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கட்டுமானப் பொருட்களின் விலை ஊரடங்கு காலத்தில் பலமடங்கு உயர்ந்துள்ளன. இந்த விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  Also Read: Covid -19 : ஆம்புலன்ஸ் ஓட்டுவது பதற்றமாகத்தான் இருந்தது - கொரோனா தொற்றால்உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் கல்லூரி மாணவி

  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாக கூறினார். சிமெண்ட் விலையை குறைக்க சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். மக்களின் நிலையை உணர்ந்து உற்பத்தியாளர்கள் விரைவில் விலையை குறைக்காவிட்டால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: