டெல்டா மாவட்டங்களுக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பித்தால் வல்லுநர் குழு - அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

டெல்டா மாவட்டங்களுக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு விண்ணப்பித்தால் வல்லுநர் குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாட்சி ஜெயராமன், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  இதற்கு பதிலளித்து பேசிய, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சி காலம் முதல் படிப்படியாக அதிகரித்து வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் 420 ஆக இருந்த சிமெண்ட் விலை தற்போது 490 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். விலையேற்றம் என தெரிந்தவுடன் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, சிமெண்ட மற்றும் கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது 460 ரூயாபாக உள்ளதாக குறிப்பிட்டார்.

  பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச உள்ளதாக கூறிய அவர், மேலும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
  ஆளுனர் உரையின் விவாதத்தின் போது மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கெதிரான திட்டங்களை அரசு அனுமதிக்கூடாது என வலியுறுத்தினார்.

  ஹைட்ரோ கார்பன் புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை. இந்த மாவட்டத்திற்கு வெளியே எண்ணெய் உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த குழு பொது மக்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். ஓ.என்.ஜி.சி அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூர் 5-ம் அமைக்க விண்ணப்பித்தனர். அவை ஜூன் 21-ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீத்தென், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: