தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் நிரப்பப்படாமல் காலியாக உள்ள, 62 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 22ம் தேதி நிறைவடைந்தது. அதில் வெற்றி பெற்றவர்கள் மறைமுக தேர்தல் மூலம், மாநகராட்சி மேயர், துணைமேயர் உள்ளிட்டோரை கடந்த 4ம் தேதி தேர்ந்தெடுத்தனர்.
இதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை. தேர்ந்தெடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட 62 பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
Must Read : எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது தீ விபத்து - வேலூரில் தந்தை, மகள் உயிரிழப்பு
காலையில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும், பிற்பகலில் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சியில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
திருமழிசை, மீஞ்சூர் பேரூராட்சிகளில் தலைவர் பதவிகள் நிரப்பட்டு உள்ள நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கழி நாடு பேரூராட்சியிலும், துணைத்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.