சென்னை விமான நிலையத்தில் நேற்று கொச்சியிலிருந்து புவனேஷ்வர் சென்ற விமானத்தில் வந்த நபர், “எனது பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேனா?” என்று போலீசாரிடம் கேட்டு தற்போது கைதாகியுள்ளார்.
கொச்சியிலிருந்து ஒரிசா மாநிலம் புவனேஷ்வருக்கு சென்ற இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு 7.30 மணியளவில் வந்தது.
இரண்டாம் நிலை உடமைகள் சோதனை முடித்த பின்னர், பயணிகள் விமானத்தில் ஏறியுள்ளனர். அப்போது, கேரள மாநிலம் பத்தனம்திட்டையைச் சேர்ந்த அலெக்ஸ் மேத்யூ என்பவர் “எனது பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேனா?” என்று ஆங்கிலத்தில் விமான பணியாளரிடம் கூறியுள்ளார்.
Read Also... பாலுறவு வீடியோவை ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிய அதிபர்!
இதனை அடுத்து, உயரதிகாரிகளுக்கு விமான பணியாளர் தகவல் அளிக்க, அங்கு உடனடியாக சிறப்பு அதிரடி படை, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். மேத்யூசில் உடமைகளையும் சோதனை செய்தனர். எனினும், அவரின் உடமைகளில் சந்தேகப்படும் படியான எந்த பொருளும் இல்லை.
இதனை அடுத்து, அவர் விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் இருக்கும் இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு உயர் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
Read Also... வளர்த்த சிங்கம் மார்பில் பாய்ந்தது
பொதுவாகவே விமான நிலையங்களில், பாம் ( வெடிகுண்டு ) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது. விளையாட்டாக நீங்கள் பயன்படுத்தினாலும் அது மிகப்பெரிய வினையில் வந்து முடியும்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.