Home /News /tamil-nadu /

'மெட்டாவெர்ஸ்' கெட்டிமேளம்.. தமிழக புதுமண ஜோடியின் டிஜிட்டல் திருமணம்...

'மெட்டாவெர்ஸ்' கெட்டிமேளம்.. தமிழக புதுமண ஜோடியின் டிஜிட்டல் திருமணம்...

metaverse marriage | பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் மாறி வரும் காலச் சூழலில் இப்போது திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்…

metaverse marriage | பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் மாறி வரும் காலச் சூழலில் இப்போது திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்…

metaverse marriage | பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் மாறி வரும் காலச் சூழலில் இப்போது திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்…

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றார்கள். பின்னர் ரொக்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றார்கள்; ஆனால் இன்று புதிய தொழில்நுட்பத்தில் மெட்டா வெர்ஸ் என்ற வடிவில் திருமணங்கள் நடைபெறும் காலத்திற்கு நாம் மாறி இருக்கிறோம்.

ஊரடங்கு காலத்தில் தொழில்நுட்ப வசதி காரணமாக ஜூம், ஸ்கைப், கூகுள் மீட் என பல வகைகளில் வேலைகளும், வகுப்புகளும், மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடக்கின்றன.

இன்றைக்கு நவீன வடிவமாக திருமண வரவேற்பை டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு நடத்துவதற்கான முறைதான் மெட்டா வெர்ஸ். சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இந்த புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் தினேஷ் மெட்டா வெர்ஸ் உதவியுடன் தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.



கிருஷ்ணகிரியில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனும் மணமகளும் தங்களுக்குப் பிடித்த தோற்றத்தோடு மெட்டா வெர்ஸ் வருவார்கள். அந்த லிங்க் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். திருமண நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்; உடனடியாக அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.

மணமேடை அலங்கரிக்கப்பட்டு மணமகனும் மணப்பெண்ணும் புது ஆடை உடுத்தி மாலை அணிந்து அனைவரிடமும் பேசுவது போன்ற ஒரு நிகழ்வு வடிவமைக்கப்படும். செல்போனில் கேம் விளையாடுவது போன்ற ஒரு தோற்றத்தில் இது முற்றிலுமாக இருக்கும் என்கிறார் தினேஷ்…



கூடுதல் சிறப்பு என்னவென்றால் மணமகளின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அவர் இந்த திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே மனைவியின் விருப்பமாக இருப்பதால் மாமனாரையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவம் கொடுத்து கண் முன் நிறுத்துகிறார் மாப்பிள்ளை தினேஷ்.

வரும் காலங்களில் ஏராளமான திருமணங்கள் இதன்மூலம் நடக்கயிருப்பதாக தினேஷ் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆசியாவில் மெட்டா வெர்ஸில் நடக்கும் முதல் திருமணம் இதுவாகும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்களுடைய குரல் மூலம் வாழ்த்து தெரிவிப்பது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற உரையாடல்களையும் நிகழ்த்த முடியும்.



திருமணச் செலவைக் குறைத்து அனைவரும் ஒரே நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதிய முன்னெடுப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெட்டா வெர்ஸ் மூலம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
திருமணம் மட்டுமல்லாது இனிமேல் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பது அலுவலக மீட்டிங் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது உள்ளிட்ட பல தளங்களில் இது பயனுள்ளதாக அமையும்.

பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் மாறி வரும் காலச் சூழலில் இப்போது திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்… இது முற்றுப்புள்ளியல்ல என்பதை நினைவில் கொள்வோம்.எனவே அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராவோம்.
Published by:Esakki Raja
First published:

Tags: Marriage, Metaverse

அடுத்த செய்தி