முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேற்படிப்புகளுக்காக அமெரிக்கா சென்ற மாணவர்களுக்கு சிக்கல் - பிரதமருக்கு தயாநிதி மாறன் கடிதம்

மேற்படிப்புகளுக்காக அமெரிக்கா சென்ற மாணவர்களுக்கு சிக்கல் - பிரதமருக்கு தயாநிதி மாறன் கடிதம்

தயாநிதி மாறன் எம்.பி

தயாநிதி மாறன் எம்.பி

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு தயாநிதிமாறன் கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :

அமெரிக்காவுக்கு மேற்படிப்புகளுக்காகச் சென்றுள்ள மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றுள்ள இந்திய மாணவர்கள், அவர்களின் கல்லூரிகளில் வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடைபெறுவதாக இருந்தால் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்றும் அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Also see:

மேலும், அத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைத்து அமெரிக்கா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசா வழங்க முடியாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

top videos

    இதனால் இந்திய மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், அதனால் அவர்களின் விசா காலத்தை நீட்டிக்க அமெரிக்காவை பிரதமர் மோடி வலியுறுத்தவேண்டும் என்றும் கடிதத்தில் தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    First published:

    Tags: America, Dayanidhi Maran