ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாடு முழுவதும் 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் வேகமான, இலவச Wi-Fi

நாடு முழுவதும் 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் வேகமான, இலவச Wi-Fi

கிராமப்புறங்களில் உள்ள சுமார் 193 ரயில்வே ஸ்டேஷன்களில் Wi-Fi சேவைகளை வழங்க, தொலை தொடர்புத் துறை (DoT), யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட்டின் (USOF) கீழ் ரூ.27.22 கோடி நிதியை அனுமதித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள சுமார் 193 ரயில்வே ஸ்டேஷன்களில் Wi-Fi சேவைகளை வழங்க, தொலை தொடர்புத் துறை (DoT), யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட்டின் (USOF) கீழ் ரூ.27.22 கோடி நிதியை அனுமதித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள சுமார் 193 ரயில்வே ஸ்டேஷன்களில் Wi-Fi சேவைகளை வழங்க, தொலை தொடர்புத் துறை (DoT), யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட்டின் (USOF) கீழ் ரூ.27.22 கோடி நிதியை அனுமதித்துள்ளது.

 • 2 minute read
 • Last Updated :

  டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஊக்கும் அளிக்கும் வகையில் நாட்டில் 6000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வேகமான மற்றும் இலவச வைஃபை (Wi-Fi) கனெக்ஷன் வசதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் அதிவேக வைஃபை சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் பொது மக்களுக்கு முதல் அரை மணி நேரம் Wi-Fi சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அரை மணி நேரத்திற்கு பிறகு கட்டண அடிப்படையில் Wi-Fi சேவை வழங்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் போது இன்டர்நெட்டை அணுக வசதியாக உள்ளது.

  மேலும் ஒவ்வொரு மாதமும் இந்த ரயில்வே ஸ்டேஷன்களின் மொத்த டேட்டா பயன்பாடு சுமார் 97.25 டெராபைட்களாக இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ரயில்வே ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்டு வரும் வைஃபை வசதி, பொதுமக்களுக்கு ஆன்லைன் சேவைகளை பெற உதவுகிறது. இது மத்திய அரசின் அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சிக்கு பங்களிக்கிறது.

  இந்திய ரயில்வேயில் சராசரியாக 13,555 ரயில்கள் (சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் இரண்டும்) இயங்குகின்றன. இதில் 63 சதவீதம் மற்றும் 37 சதவீதம் ரயில்கள் முறையே மின்சாரம் மற்றும் டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சர் கூறுகையில், ரயில்வே ஸ்டேஷன்களில் Wi-Fi வழங்கும் திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகத்தால் தனியாக நிதி எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

  Also read... பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் - வல்லுநர்கள் கருத்து

  கிராமப்புறங்களில் உள்ள சுமார் 193 ரயில்வே ஸ்டேஷன்களில் Wi-Fi சேவைகளை வழங்க, தொலை தொடர்புத் துறை (DoT), யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட்டின் (USOF) கீழ் ரூ.27.22 கோடி நிதியை அனுமதித்துள்ளது. சுமார் 1287 ரயில் நிலையங்களில் (பெரும்பாலும் A1 மற்றும் A கேட்டகிரியைசேர்ந்தது), வைஃபை வசதியை RailTel Corporation of India Limited (RCIL) வழங்குகிறது. மீதமுள்ள ரயில் நிலையங்களில் பல நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு/தொண்டுத் திட்டங்களின் கீழ் வைஃபை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக எந்த மூலதனச் செலவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறி இருக்கிறார்.

  Also read... தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு எச்சரிக்கை - ஐடி பெறுநிறுவனம் அறிவிப்பு!

  இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் உள்ள ஸ்டேஷன்களில் வழங்கப்பட்டு வரும் ஃபாஸ்ட் மற்றும் ஃப்ரீ Wi-Fi வசதி உலகின் மிகப்பெரிய பொது Wi-Fi நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்த வசதி ரயில்வே ஸ்டேஷன்களில் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் சேவைகள் மற்றும் தகவல்களை பெற உதவுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா இடையிலான டிஜிட்டல் இடைவெளியை குறைக்க இலவச இணைய சேவைகள் உதவும் என்று ரயில்வே அமைச்சகம் கூறி இருக்கிறது.

  First published: