ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியன் ரயில்வே தக்கல் டிக்கெட்டுகளில் மாபெரும் மோசடி..டாப் செல்லர் சைபர் குற்றவாளி கைது.

இந்தியன் ரயில்வே தக்கல் டிக்கெட்டுகளில் மாபெரும் மோசடி..டாப் செல்லர் சைபர் குற்றவாளி கைது.

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி

சைலேஷ் யாதவிடமிருந்து 13 போலி மொபைல் நம்பர்கள், இரண்டு சர்வதேச எண்கள், நான்கு போலி வங்கி கணக்குகள்,  போலீ அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ரயில்வே இணையதளமான IRTC இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் தக்கல் டிக்கெட்டுகளில் முறைகேடு நடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

குறிப்பாக IRTC இணையதளத்தில் தக்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்த டிக்கெட்டுகள் புக் ஆகாமல் வேறொரு இணைய தளம் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெடுக்கள் உடனடியாக கன்ஃபார்ம் ஆவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

இதனையடுக்கு திருச்சி ஆர்.பி.எஃப் டிவிஷன் சைபர் கிரைம் போலீசார் இந்த சட்ட விரோத முறைகேட்டில் ஈடுபடும் கும்பல் யார் என கண்டறிய விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக ஆர்.பி.எஃப் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் Tatkalsoftwareall.in என்ற தக்கல் டிக்கெட் புக் செய்யும் இணைய தளங்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறிந்தனர்.

இந்த இணையதளத்துகாக Godaddy இணையதளத்தில் Domain வங்கியுள்ளதையும் கண்டறிந்தனர். Godaddy இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஈ-மெயில் ஐ.டி, ஐ.பி முகவரி, செல்போன் நம்பர்களை கண்டறிந்து பீகார் தனப்பூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான சைலேஷ் யாதவ்(27) என்ற இளைஞரை திருச்சி டிவிஷன் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் திருவண்ணாமலை ரயில்வே போலீசார் உதவியோடு கைது செய்தனர்.

சைலேஷ் யாதவை கைது செய்து திருச்சி அழைத்து வந்த விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சட்டவிரோதமாக இந்தியன் ரயில்வேயில் தக்கல் டிக்கெட்டுகளை புக் செய்து மோசடியில் ஈடுபட சாஃப்ட்வேர்களை கள்ளசந்தை கும்பலுக்கு விற்பனை செய்து வரும் டாப் செல்லர் சைபர் மோசடி மன்னன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

SHARP, NEXUS, BMX PLUS, ELITE, BLACK TIGER, TESLA, COVID V2, CORONA, ALL INTERFACE, RED TURBO உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சர்வதேச எண்கள் மூலம் வாங்கி அதனை சட்டத்திற்கு புறம்பாக தக்கல் டிக்கெட்களை பதிவு செய்யும் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 10,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத தக்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்யும் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வெளி நாடுகளிலிருந்து வாங்கும் சாஃப்ட்வேர்களை தலா ரூ. 5000-10,000 வரை ஏஜெண்டுகளிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த சட்ட விரோத சாப்ட்வேர்கள் மூலம் ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் 7000க்கும் அதிகமான டிக்கெட்களை புக் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 18 மாதங்களில் சுமாராக ஒரு லட்சத்து 30 ஆயிரம் தக்கல் டிக்கெட்களை சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்து அதன் மூலம் 56 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாதம் ஒன்றுக்கு இதன் மூலம் ரூபாய் 3 லட்சம் வரை சைலேஷ் சம்பாதித்து வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு சாப்ட்வேருக்கும் 25% கமிஷன் தொகை வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்துள்ளார். சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது எப்படி? தக்கல் டிக்கெட்டுகளை புக் செய்வது எப்படி என தன்னிடம் சாஃப்வேர் வாங்கும் ஏஜெண்டுகளுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக  TSA group என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து மோசடி செய்வதற்கு சைலேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை அருகே நடித்துக் காட்டுவதற்காக தூக்கு மாட்டிய 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு…

மேலும், Telegram மற்றும் whatsapp ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் குழு அமைத்து சாப்ட்வேர் வாங்கும் நபர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்துள்ளார். Anydesk போன்ற சாஃப்ட்வேர் மற்றும் செயலிகளை பயன்படுத்தியும் இந்த சாப்ட்வேர்களை வாங்குபவர்களுக்கு தான் இருந்த இடத்திலிருந்து இந்தியா முழுவதும் சாப்ட்வேர் குறித்து பயிற்சி அளித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களில் இந்த சாஃப்ட்வேர்களை சுமார் 3,485 பேருக்கு விற்பனை செய்து அதன்மூலம் ரூ.1 கோடி சம்பாதித்துள்ளதும், ரூ.30 லட்சத்திற்கு மேல் கமிஷன் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத சாஃப்ட்வேர்கள் மூலம் IRTC  வெப்சைட்டில்  பாதுகாப்பு அம்சங்கள் மீறி நொடிப் பொழுதில் டிக்கெட்டுகளை பதிவு செய்தல், பிளாக் செய்தல், பயண விவரங்களை தானாக பதிவிடுதல் உள்ளிட்டவற்றை செய்ய முடியும் என்பதும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் படிக்க: பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு..வெளியான சிசிடிவி காட்சி

மேலும், சைலேஷ் யாதவ் வெப்சைட்டை ஆய்வுசெய்து, சட்டவிரோத சாப்ட்வேர்களை வாங்கியவர்கள் பட்டியல் மற்றும் பணம் செலுத்திய நபர்கள் விவரங்கள், இமெயில் ஐடி, செல்போன் எண்கள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த தகவல்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டுவரும் மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

சைலேஷ் யாதவிடமிருந்து 13 போலி மொபைல் நம்பர்கள், இரண்டு சர்வதேச எண்கள், நான்கு போலி வங்கி கணக்குகள்,  போலீ அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சைலேஷ் யாதவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Crime News