குவைத்தில் பாஸ்போட் இன்றி தவித்த தமிழர் விரைவில் நாடு திரும்புவார்! நியூஸ்18-க்கு பதிலளித்த இந்தியத் தூதரகம்

நியூஸ்18 இணையதளம் செய்தி பதிவிட்டு 7 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த இந்திய தூதரக அதிகாரிகள்

  • News18
  • Last Updated: December 4, 2019, 7:19 PM IST
  • Share this:
கருப்பசாமி குறித்து குவைத் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்று குவைத் நாட்டுக்கான இந்தியத் தூதரகம் நியூஸ்18க்கு பதிலளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி. சேதுராஜபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி, கடந்த 2014-ம் ஆண்டு குவைத்திற்கு ஓட்டுனர் பணிக்காக சென்றிருக்கிறார்.

தொடர்ந்து தொடர்பில் இருந்த அவர் கடந்த மாதம் கடைசியாக விட்டிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது தனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாகவும், தன்னுடைய முதலாளி தகராறு செய்வதாகவும் கூறியிருக்கிறார். பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் புதுப்பித்துவிட்டு விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.


அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தார் கூறுகின்றனர். இதனால் கருப்பசாமியை உடனடியாக அரசு மீட்டுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் அளித்தனர்.

இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இணையதளத்தில் பதிவிடப்பட்ட செய்தியை பார்த்த, குவைத் நாட்டு இந்தியத் தூதரகம்  ட்விட்டர் வழியாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக்கொண்டது.

இதுகுறித்த உடனடியாக  நியூஸ்18 தமிழ் ட்விட்டர் பக்கத்தில் இந்தியத் தூதரகம் அளித்த பதிலில், ‘கருப்பசாமியின் குடும்பத்தினர் வருத்தப்படவேண்டாம் என்றும், நாடு திரும்புவதற்கு கருப்பசாமிக்கு அவசர சான்று அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியின் ஒருபகுதியாக அவருடைய இருப்பு குறித்து குவைத் அதிகாரிகளிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. கருப்பசாமி அவருடைய குடும்ப உறுப்பினர்களை விரைவில் சந்திப்பார் என்ற நம்பிக்கை வார்த்தையையும் தூதரகம் பதிவிட்டுள்ளது.

Loading...

இந்தியத் தூதரகம் பதிலளித்தது தொடர்பாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


Alsosee:

 


First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...