இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்தநிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, ‘திருத்துறைப்பூண்டிதனி தொகுதியில் மாரிமுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், பவானிசாகர் தொகுதியில் பி.எல்.சுந்தரம்,
திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி என்ற சுப்ரமணியன், வால்பாறை தொகுதியில் எம்.ஆறுமுகம், சிவகங்கை தொகுதியில் குணசேகரன் போட்டியிடுகின்றனர்.