ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் இல்லையென்றால் இந்தியா கொரோனாவில் செத்திருக்கும் - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் இல்லையென்றால் இந்தியா கொரோனாவில் செத்திருக்கும் - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

டிஜிபி சைலேந்திர பாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா இல்லை பி.எஃப்.ஐ -இடம் சம்பளம் வாங்குகிறாரா என கேள்வி எழுப்பினார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் இல்லையென்றால் இந்தியா கொரோனாவில் செத்திருக்கும் என்பதை டிஜிபி சைலேந்திரபாபு உணர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செப்டம்பர் 29ம் தேதியன்று, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் 65 ஆவது பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடினர். இதனையடுத்து கட்சித் தொண்டர்களிடையே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

  இதனை தொடர்ந்து செய்திகளிடம் பேசிய அவர், பல்வேறு கொலைகள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால் நேற்றைய தினம் PFI மற்றும் தொடர்புடைய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

  மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும்  1991ல் அரசு தகவல்களை விடுதலை புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால் தான் திமுக அரசு கலைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். PFI இயக்கத்திற்கு ஆதரவாக பேசிவரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டினார்.

  ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பேசிய அவர், டிஜிபி நீதித்துறைக்கு தலைவணங்க வேண்டும் என பேசினார்.

  டிஜிபி சைலேந்திர பாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா இல்லை பி.எஃப்.ஐ -இடம் சம்பளம் வாங்குகிறாரா என கேள்வி எழுப்பினார். மேலும் மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் இல்லையென்றால் இந்தியா கொரோனாவில் செத்திருக்கும் என்பதை டிஜிபி சைலேந்திரபாபு உணர வேண்டும் என  சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

  இதையும் வாசிக்க: 'ஓசி பேருந்து’ என விளையாட்டாக பேசியதை தவறாக புரிந்துக் கொண்டனர் - அமைச்சர் பொன்முடி விளக்கம்

  மத்திய உளவுத்துறை அறிக்கையில் தமிழ்நாட்டை பற்றியும் கூறியுள்ளது எனவும் அரசை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் தேசவிரோத தடுப்பு நடவடிக்கைகளில் திருமாவளவன், சீமான் இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

  இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை அவமதித்து பேசியதாக ஹெச்.ராஜா மீது இன்று காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  - முத்துராமலிங்கம், செய்தியாளர், காரைக்குடி

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: HRaja, RSS, Seeman, Sylendra Babu, Thirumavalavan