முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க நாடே அழைக்கும்”... பிறந்தநாள் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

“மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க நாடே அழைக்கும்”... பிறந்தநாள் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

கருணாநிதியை போன்று அவரது மகனாக ஸ்டாலினும், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி வருவதாக துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய துரைமுருகன், தமிழுக்காவும், தமிழ் மக்களுக்காகவும் மு.க.ஸ்டாலின் இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கலைஞரைப் போன்று அவரது மகனாக ஸ்டாலினும், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி வருவதாகப் பாராட்டு தெரிவித்தார். ஸ்டாலின் கட்சியின் தலைவர் மட்டுமன்றி நாட்டின் தலைவர் என்றும் துரைமுருகன் பேசினார்.

மேலும், “இந்திரா காந்தி ஆட்சியில், அவரிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் குடியரசு தலைவர் என கேட்டபோது. எனக்கு தெரியாது கருணாநிதியிடம் கேளுங்கள் என்று இந்திரா காந்தி சொன்னார். அதுபோல இந்திய தலைவர்கள் ஸ்டாலினை தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க; காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது'' பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகையில், சிறப்பான கூட்டணியை அமைத்து தொடர்ந்து 4 தேர்தல்களில் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் என்று பாராட்டு தெரிவித்தார். அடுத்த நகர்வு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியதாக இருக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு பேசினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK Alliance, Duraimurugan