முகப்பு /செய்தி /தமிழ்நாடு / T20WC| இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்: காஷ்மீரில் கொல்லப்பட்ட பானிபூரி விற்பனையாளர் சகோதரர் ஆவேசம்

T20WC| இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்: காஷ்மீரில் கொல்லப்பட்ட பானிபூரி விற்பனையாளர் சகோதரர் ஆவேசம்

கொல்லப்பட்ட பானிபூரி விற்பவர் அரவிந்த் குமாரின் சகோதரர் முகேஷ் ஷா, “பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். பாகிஸ்தானுடன் எந்த ஒரு போட்டியிலும் நாம் ஆடக்கூடாது. உடனே உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும் ...
 • Last Updated :

  காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதிகள் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் நாம் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுவதா என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆவேசமாக கூறி போட்டியை ரத்து செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

  ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அக்டோபர் 24ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் பரமவைரிகள் என்ற ஹோதாவில் மோதுகின்றன, விற்றுத் தீர்ந்தன, இந்நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து ஒரு சமுதாயத்தினரைக் குறிவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுகின்றன, எனவே உலகக்கோப்பை டி20 போட்டியை பாகிஸ்தானுடன் மோதும் போட்டியை ரத்து செய்க என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

  “இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் சரியில்லாமல் இருக்கிறது, சிக்கலில் இருக்கிறது, எனவே இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும், இதனை பரிசீலனை செய்ய வேண்டும். காஷ்மீரில் இலக்கு வைத்து சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். குல்காமில் காஷ்மீரைச் சாராத 2 தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

  பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். ஒரு கார்பெண்ட்டரும், பானிபூரி விற்பவரும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்டுள்ளனர்” என்று பேசியுள்ளார் கிரிராஜ் சிங்.

  பஞ்சாப் அமைச்சர் பரகத் சிங்கும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார், “எல்லையில் நிலமைகள் சுமுகமாக இல்லை எனவே இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடக்கக் கூடாது. இருநாடுகளுமே தற்போது கவலைதரும் காலக்கட்டத்தை கடந்து வருகின்றன, நாம் மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் எனவே இரு நாட்டு உறவுகள் மேலும் மோசமடையும் எந்த ஒரு நிகழ்வையும் நாம் நடத்தக்கூடாது.

  top videos

   கொல்லப்பட்ட பானிபூரி விற்பவர் அரவிந்த் குமாரின் சகோதரர் முகேஷ் ஷா, “பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். பாகிஸ்தானுடன் எந்த ஒரு போட்டியிலும் நாம் ஆடக்கூடாது. உடனே உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

   First published: