முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிட்னி டெஸ்ட்: இந்திய அணியில் என்ன மாற்றம்?

சிட்னி டெஸ்ட்: இந்திய அணியில் என்ன மாற்றம்?

Two Spinners or One? Hardik for Rohit? | சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித்துக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இறக்கப்படலாம் என தெரிகிறது.

Two Spinners or One? Hardik for Rohit? | சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித்துக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இறக்கப்படலாம் என தெரிகிறது.

Two Spinners or One? Hardik for Rohit? | சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித்துக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இறக்கப்படலாம் என தெரிகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

    சிட்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை சுழற்பந்து வீச்சாளர் இறக்கப்படுவார்கள் மற்றும் ரோகித்துக்கு பதிலாக யார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் (03.01.19) தொடங்குகிறது.

    Sydney Cricket Ground
    சிட்னி கிரிக்கெட் மைதானம். (Cricket Australia)

    சிட்னி ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால், இந்திய அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜடேஜா உடன் களமிறங்க இருப்பவர் யார்?, காயத்தில் இருந்து மீண்டு வந்த அஸ்வினா? அல்லது குல்தீப் யாதவா? என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    Jadeja, ரவீந்திர ஜடேஜா
    வலைப்பயிற்சியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. (Twitter/BCCI)

    மிடில் ஆர்டரில் இறங்கிவந்த ரோகித் சர்மா, குழந்தை பிறந்திருப்பதால் தாய் நாட்டிற்குச் சென்றுவிட்டார். அவரது இடத்தில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இறக்கப்பட்டால், பேட்டிங்கில் வலிமை குறையும். அதனால், ரோகித்துக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இறக்கப்படலாம் என தெரிகிறது.

    Hardik Pandya, ICC, பாண்டியா
    ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. (Twitter/ICC)

    கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் உடன் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினால், 3 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க வேண்டியது வரும். ஏற்கனவே, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிட்னிக்கான அணியில் வீரர்களைத் தேர்வு செய்வதில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Also Watch...

    First published: