Home /News /tamil-nadu /

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை மீண்டும் ஒத்திவைத்த இந்தியா!

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை மீண்டும் ஒத்திவைத்த இந்தியா!

மெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான வரியை 2018 ஆகஸ்ட் 4 முதல் உயர்த்த இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

  • 1 minute read
  • Last Updated :
    அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் 29 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதாக அறிவித்திருந்தது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    2018-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கான வரியை 25 சதவீதம் வரை அதிகரித்தனர்.

    இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் பாதித்தது.

    உடனே நாங்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான வரியை 2018 ஆகஸ்ட் 4 முதல் உயர்த்த இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

    பின்னர் இந்த வரி உயர்வு முடிவைச் செப்டம்பர் 18 வரை ஒத்திவைத்துவிட்டு இரு நாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வரை இந்த வரி உயர்வை இந்தியா அமலுக்குக் கொண்டு வரவில்லை.

    இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிலிருந்து மீண்டும் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் மே 6-ம் தேதி இந்தியா வர உள்ளார். எனவே இந்த வரி உயர்வு முடிவை மீண்டும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்,

    ஏற்கனவே, அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.

    எனவே இந்திய மோட்டார் வாகனங்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:
    First published:

    அடுத்த செய்தி