Home /News /tamil-nadu /

நாளை மறுதினம் சுதந்திர தினவிழா - ராஜாஜி சாலையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாளை மறுதினம் சுதந்திர தினவிழா - ராஜாஜி சாலையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தின விழா ஒத்திகை - கோப்புப் படம்

சுதந்திர தின விழா ஒத்திகை - கோப்புப் படம்

நாளை மறுதினம் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் கொண்டாடப்படுவதை யொட்டி அதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் இறுதி நாளாக இன்று நடைபெற்றது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு, மகளிர் காவலர் பிரிவு, குதிரைப் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடந்தது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்பது போல, அவரது பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரி ஒருவரை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டு, தேசிய கொடியும் ஏற்பட்டது.

    கொரோனா தாக்கத்தால் அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர், ஏற்கனவே கடந்த 8, 10-ம் தேதி இரண்டு முறை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று இறுதி நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் படிக்க...முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...? அதிமுக முக்கிய நிர்வாகிகள் குழு ஆலோசனை

    அணிவகுப்பு ஒத்திகை காரணமாக தலைமைச்செயலகம் வரும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Independence day

    அடுத்த செய்தி