Home /News /tamil-nadu /

தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாகம்

தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாகம்

விஜயகாந்த்

விஜயகாந்த்

DMDK : தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    75-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் பங்கேற்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகள், கட்சியினரின் திருமண நிகழ்வுகளில் எல்லாம் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் மட்டும் கலந்துக்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் விஜயகாந்த் கட்சி அலுவலத்தில் தேசிய கொடி ஏற்ற வருகிறார் என்ற அறிவிப்பை செய்தி கேட்டதும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். காலையில் இருந்தே விஜயகாந்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

    Also Read: 'தமிழகம் ஒருபோதும் காவி மண்ணாக மாறாது' - கி.வீரமணி பேச்சு

    சொன்னதுபோலவே இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். உடன் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொண்டர்களுக்கும், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMDK, Independence day, Vijayakanth

    அடுத்த செய்தி