74 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருவதால் மக்கள் அதிக அளவு நேரடியாக சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை காவல்துறை ஆணையர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
சென்னை காவல்துறையின் 3 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்களின் நேரடிப்பார்வையில் 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் . இதனையொட்டி சென்னை தலைமை செயலகத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை தலைமை செயலகம் முழுவதும் கண்காணிக்க நவீன சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
மேலும், சென்னையின் முக்கிய இடங்களான விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, ட்ரோன் கேமராக்கள் மூலம் சென்னையை கண்காணிக்கும் பணி தீவிரப்படுப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து வாகனத்தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
சொத்து தகராறில் பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலைசெய்த தந்தை..
குறிப்பாக கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை நேரலையில் கண்டுகளிக்கமாறு சென்னை காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.