முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு... அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு... அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

Special Bus

Special Bus

Holiday Special Bus | சுதந்தர தினத்தை முன்னிட்டு மூன்று நாள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

வரும் திங்கள்கிழமை சுதந்திர தினம் என்பதால், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு3870 ரூபாயும், மதுரைக்கு 3000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சமானிய மக்கள் அரசு பேருந்து சேவையை தான் நம்பி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் சேர்த்து 610 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் இன்று கோயம்பேட்டில் இருந்து 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் மேலும், நாளை 185 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாத போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Also Read : சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து தினசரி 1950 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் நிலையில் தொடர் மூன்று நாள் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்க நடவடிக்கையை போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது. சனி,ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் ஆகிய மூன்றுநாள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Chennai, Independence day, Special buses, Tamilnadu