இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பந்து வீசிய முறை தொடர்பாக அவருக்கும் - அம்பயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களை இழந்து முதல் இன்னிங்கிஸில் 296 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியைவிட 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட் செய்தபோது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் (ravichandran ashwin) பல்வேறு உத்திகளை மேற்கொண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக 3 விக்கெட்களையும் அவர் கைப்பற்றினார். இதனிடையே, களத்தில் ஆடி கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அம்பயருக்கு மறைக்கும் விதமாக diagonal run-up முறையில் அஸ்வின் பந்துவீசினார். பிட்சுக்கு நடுவே சென்று அவர் பந்துவீசிய போது அம்பயர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேப்டன் ரகானேவிடம் அம்பயர் இது குறித்து கூறினார்.
எனினும், அஸ்வின் தொடர்ந்து அந்த முறையிலேயே பந்து வீசினார். அவர் ஓவர் முடித்துவிட்டு சென்றபோது, அம்பயர் நிதின் மேனன் அஸ்வினை அழைத்து அவரது பந்து வீச்சு குறித்து பொறுமையுடன் தெரிவித்தார்.
Ashwin argues with umpire Nitin Menon pic.twitter.com/R5qMxyeDi0
— Sunaina Gosh (@Sunainagosh7) November 27, 2021
முன்னதாக ஆட்டத்தில், 73வது ஓவரில் டாம் லாதம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்திருக்க வேண்டும் எனினும். அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்கவில்லை. இது அஸ்வினை அதிருப்தி அடைய செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.