இந்தியா- இங்கிலாந்து அணி மோதவுள்ள சேப்பாக்கம் மைதானம் - ஒரு பார்வை

இந்தியா- இங்கிலாந்து அணி மோதவுள்ள சேப்பாக்கம் மைதானம் - ஒரு பார்வை

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியின் சேப்பாக்கம் மைதானத்தின் சாதனை பயணத்தை தெரிந்துகொள்வோம். 

 • Share this:
  சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் 1916-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு நடத்தப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

  முதல் வெற்றியை 1952-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பதிவு செய்தது. இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  11 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.

  சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி நான்கு முறை இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் மூன்று முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

  இந்தியா - இங்கிலாந்து அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் ஒன்பது முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 5 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: