வழுக்கும் பாத்ரூம்; புதுச்சேரி ரவுடிகளுக்கு கடலூரில் மாவுக்கட்டு! மீண்டும் சர்ச்சையில் சிக்கும் காவல்துறை

Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 9:40 PM IST
வழுக்கும் பாத்ரூம்; புதுச்சேரி ரவுடிகளுக்கு கடலூரில் மாவுக்கட்டு! மீண்டும் சர்ச்சையில் சிக்கும் காவல்துறை
கைது செய்யப்பட்ட ரவுடிகள்
Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 9:40 PM IST
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் நான்கு பேரை கடலூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சில முக்கியமான சம்பவங்களில் கைது செய்யப்படுபவர்கள் காவல்நிலையத்தில் வைத்து பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போட்ட நிலையில் புகைப்படம் வெளியாகும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடிகள் நெல்லிக்குப்பத்தில் தங்கியிருப்பதாக தகவல் வந்தததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் ரடிகளைச் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ,புதுச்சேரியை சேர்ந்த ரவுடி முகிலனை கொலை செய்ய திட்டம் திட்டியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இந்த நிலையில், பிடிபட்ட நான்கு பேரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கையும், காலும் உடைந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Watch

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...