Home /News /tamil-nadu /

இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் புதிதாக கொரோனா உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக சரிந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 1,596 ஆக பதிவாகியுள்ளது. இந்திய அளவில் சிகிச்சை பலனின்றி 338 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் 24 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 684 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,596 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் 21 பேர் மரணம் அடைந்ததால், பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து ஒரேநாளில் ஆயிரத்து 534 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்து 77 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 16 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களை பொறுத்தவரை கோவையில் 224 பேருக்கும், சென்னையில் 186 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும், தஞ்சாவூரில் 92 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூரில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புகளை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 5 பேர் இறந்துள்ளனர். 24 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக சரிந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தெரிவித்துள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 14 சதவிகிதம் அதிகமாகும். கேரளாவில் மட்டும் 30 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 16 சதவிகிதமாக குறைந்திருந்த சோதனை மீண்டும் 17.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஏற்கெனவே மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக மும்பை மாநகர ஆணையர் கிஷோரி பட்நாகர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 567 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 3 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 618 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும், கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 749 ஆக உயர்ந்ததுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3லட்சத்து 93 ஆயிரத்து 614 ஆக உள்ளது.

    Must Read : தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    இந்நிலையில், இதுவரை 71 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 428 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19, News On Instagram

    அடுத்த செய்தி