• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி - ஒகேனக்கல்

காவிரி - ஒகேனக்கல்

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 107.18 அடியாக உள்ளது.

  • Share this:
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், காவிரி ஆற்றில் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில், மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 107.18 அடியாக உள்ளது. அதன்படி, நீர்இருப்பு 74.46 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 36,162 கன அடியிலிருந்து, 32,982 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து கடந்த இரு நாட்களாக அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. பின்னர் நீர்வரத்து குறையத் தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 980 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 957 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நலன்கருதி வினாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28அடியில் 41. 33அடி நீர் சேமிக்கப்பட்டு, வரத்தாக உள்ள 957 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக 88 கனஅடியுடன் திறக்கப்பட்டு 1,068 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த இரண்டு நாட்களுக்கு மேல் நோக்கி நகரக் கூடும்.

    Must Read : வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை

    இதன் காரணமாக இன்று முதல் வருகிற நவம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கும், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: