Home /News /tamil-nadu /

நீர்வரத்து அதிகரிப்பு: வைகை ஆற்றில்‌ இறங்கவோ, குளிக்கவோ கூடாது.. நீர்வளத்துறை எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பு: வைகை ஆற்றில்‌ இறங்கவோ, குளிக்கவோ கூடாது.. நீர்வளத்துறை எச்சரிக்கை

 வைகை ஆறு

வைகை ஆறு

வைகை ஆற்றின்‌ கரையோரம்‌ வசிக்கும்‌ கிராம மக்கள்‌ ஆற்றில்‌ இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில்‌ குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளாதல் வைகை ஆற்றில்‌ இறங்கவோ, குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம்‌ ஆண்டிபட்டி தாலுகாவில்‌ அமைந்துள்ள வைகை அணையில்‌ தென்மேற்கு பருவமழையின்‌ காரணமாக நீர்வரத்து அதிகரித்து நாளை 03.08.2022 காலை 8.00 மணிக்கு மேல்‌ மொத்த கொள்ளளவான 71 அடியில்‌ 70 அடி கொள்ளளவை எட்டவுள்ளதால்‌, வைகை அணையிலிருந்து உபரிநீர்‌ வைகை ஆற்றில்‌ திறந்துவிடப்படவுள்ளது.

    எனவே தேனி, மதுரை, திண்டுக்கல்‌, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ வைகை ஆற்றின்‌ கரையோரம்‌ வசிக்கும்‌ கிராம மக்கள்‌ ஆற்றில்‌ இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில்‌ குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி